பட்டா பெயர் மாற்றம் செய்து தர விண்ணப்பித்தவரிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மோகனப்பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்துக்கோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியில் வசித்து வரும் மூர்த்தி என்பவர் தன்னுடைய தந்தை பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்றி தருமாறு விண்ணப்பித்துள்ளார். […]
