பிளாஸ்டிக் பைகளை சட்டவிரோதமாக கடைகளில் பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கியுள்ளார். அந்த கூட்டத்தில் கலெக்டர் கூறும்போது, விழுப்புரம் திண்டிவனம் நகராட்சி மற்றும் பேரூராட்சி உட்பட்ட வீதிகள், கடைவீதிகள், நகர்ப்புற சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும், […]
