மலைப்பாதையில் பிரேக் பிடிக்காததால் அரசு பேருந்து பின்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டுவில் இருந்து அரசு பேருந்து ஒன்று பண்ணை காடு நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் பெரும்பாறை அருகில் உள்ள மீனாட்சி ஊத்து பகுதியில் சென்று கொண்டிருந்த போது பயணிகளை இறக்கி விடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் பிரேக் பிடிக்காததால் பேருந்து […]
