தூத்துக்குடி அருகே அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ரத்ததான கழக நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து ரத்ததான கழக உறுப்பினர்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு புத்துயிர் இரத்ததான கழக தலைவர் தலைமை தாங்க மற்றவர்கள் அவருடன் சேர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும், மருத்துவமனை வளாகத்திற்குள் சிமெண்ட் […]
