தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த 13 நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பதாக மதுவிலக்கு அமல் பிரிவு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அங்கே சாராயம் காட்சி கொண்டிருந்த நபர்களை கைது செய்ததோடு 53 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வன பகுதியில் […]
