அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து 3-வது நாளாக தனது தலையில் சேலையால் முக்காடு போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு எங்களை அரசு ஊழியர் ஆக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், ஓய்வூதியம் பெறும் போது […]
