இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவை குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர். இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வரச்சொல்லி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அழைப்பையேற்ற அவர், இந்தியாவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இந்தியா வந்தடைந்தார். நாட்டின் தலைநகர் டெல்லியில் வந்திறங்கிய அவரை, மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். கோத்தபயவுடன் இலங்கை வெளியுறவுத் துறை […]
