இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஈழ தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார். இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது கடந்த 2009-ம் ஆண்டு இறுதி கட்ட போர் நடைபெற்றது. அப்போது மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், தற்போதைய அதிபருமான கோத்தபய ராஜபக்சே ராணுவ மந்திரியாக இருந்தார். இவர்தான் இறுதி கட்ட போரை முன்னின்று நடத்தினார். அந்த போரில் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டில் முன்னாள் […]
