மண்பானைகள் உற்பத்தி முடிவடைந்த நிலையில் வருகின்ற கோடை காலங்களில் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆவலப்பம்பட்டி, பொன்னாபுரம், நல்லம்பள்ளி, பெரும்பதி, வேட்டைகாரன்புதூர் போன்ற இடங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியானது அதிக அளவில் நடைபெற்றுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்னரே இந்த ஆண்டு மண்பாண்டங்கள் தயாரிப்பு முடிவடைந்த நிலையில் எதிர்பார்த்த அளவு இன்னும் மண்பானைகளின் விற்பனை அதிகரிக்கவில்லை. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும்போது, குளிர்சாதன பெட்டி குளிர் நீரை விட மண்பாண்டத் குளிர்நீர் உடம்புக்கு […]
