முக கவசத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த வாலிபர் சோதனையின் போது வசமாக சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய கமிஷனர் ராஜன் சௌத்ரிக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தி வரபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் விமானநிலைய கமிஷனரின் உத்தரவின் பேரில் துபாயில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]
