அம்மன் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்கட்டளை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் சிலர் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்கரையில் ரேணுகாதேவி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் ரேணுகாதேவி அம்மன் சிலையை அகற்றி அதை வைத்தவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் சிலர் மீண்டும் அம்மன் சிலையை […]
