மர்ம நபர்கள் விநாயகர் சிலையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழிவிடு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் விநாயகர் சிலையின் தலை பகுதி மட்டும் உடைக்கப்பட்டு மாயமானதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் விநாயகர் சிலையின் தலைப் பகுதியை உடைத்து அதனை அங்கிருந்த […]
