டிரெண்ட் மன்னனாக இந்தியாவையே கலக்கிவந்த கான்ட்ராக்டர் நேசமணி 2019 ஆண்டோடு விடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ்நாட்டுக்காரர்கள் குசும்புக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நூற்றாண்டை இணையதளம் ஆதிக்கம் செலுத்தும் காலமாக மாறிவிட்டது. ஒரு செய்தி காட்டுத்தீபோல் வைரலாக வேண்டும் அதுவும் மக்கள் மத்தியில் விஷ்வரூபம் எடுத்து விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முக்கியமாக ஒரு காணொலி, புகைப்படம், முக்கியத் தகவல்கள் எதுவாக இருந்தாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் டிரெண்டாக்குவது வழக்கமாகிவிட்டது. […]
