திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொரசனம்பட்டி பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் கட்டியிருந்த 11 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லையாவின் குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கும், கால்நடை துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோபால்பட்டி அரசு கால்நடை மருத்துவர் முருகானந்தம் ஆடுகளை பரிசோதனை செய்தார். அப்போது நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் படுகாயமடைந்தது தெரியவந்தது. […]
