மர்ம விலங்குகள் கடித்து இரண்டு ஆடுகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருவாச்சி பகுதியில் ரங்கசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் தனது நான்கு செம்மறி ஆடுகளையும் ரங்கசாமி ஆட்டு கொட்டகையில் அடைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது இரண்டு ஆடுகள் இறந்த நிலையிலும், மற்ற இரண்டு ஆடுகள் படுகாயத்துடனும் கிடப்பதை பார்த்து ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் […]
