இன்றைய நாள்: மார்ச் 9 கிரிகோரியன் ஆண்டு: 68 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 69 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 297 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: கிமு 141 – லியூ சே சீனாவின் ஆன் வம்சப் பேரரசராக முடிசூடினார். 1009 – லித்துவேனியா பற்றிய முதலாவது வரலாற்றுப் பதிவு குவெட்லின்பர்க் மதப்பள்ளியின் ஆண்டுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. 1226 – சுல்தான் யலால் அத்-தின் சார்சியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றினார். 1500 – பெத்ரோ கப்ராலின் கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர். 1566 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் செயலாளர் டேவிட் ரிசியோ எடின்பரோவின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். 1796 – நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார். […]
வரலாற்றில் இன்று மார்ச் 9..!!
