தெற்காசியாவில் அதிக பசி, வறுமையால் வாடும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலில் (Global Hunger Index) வறுமை அடிப்படையில் இந்தியா 102-ஆவது இடம் வகிக்கிறது. உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்ற நிலையில், தெற்காசிய நாடுகளில் அதிக பசி, வறுமையால் வாடுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. வறுமை நிலையில், பாகிஸ்தான், நேபால், இலங்கை போன்ற அண்டை நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. […]
