நடிகர் விஜய் தேவரகொண்டா-வின் ‘லிகர் GLIMPSE’ ஒரே நாளில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா தற்போது லிகர் படத்தில் நடித்து வருகிறார் .தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார். இதில் ஹிந்தி திரையுலகில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர் இப்படத்தை பூரி ஜெகன்னாத் உடன் இணைந்து தயாரித்துள்ளார். MMA FIGHT எனப்படும் குத்துச் சண்டையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. […]
