கண்ணாடி பாலத்தில் நடந்து சென்ற கொண்டிருக்கும்போது திடிரென கண்ணாடி உடைந்ததால் சுற்றுலா பயணி பயந்து நடுங்கிய காட்சி இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் Longjing என்ற கிராமத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் நடப்பதற்கு சுற்றுலா பயணிகள் பயந்து நடுங்குவார்களாம். உண்மையாகவே இந்த பாலத்தின் மீது நடப்பதற்கு அதீத தைரியம் வேண்டும். பொதுவாக இந்தப் பாலத்தின் மீது நடக்கும் சுற்றுலாப் பயணிகளை ஸ்பெஷல் எஃபெக்ட் மூலம் பாலத்தின் […]
