48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேவை மைய கட்டிடத்தை அரசு மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர் திறந்து வைத்துள்ளார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். அப்போது கலெக்டர் கூறும்போது, சூலக்கரை அன்னை சத்யா குழந்தைகள் காப்பக வளாகத்தில் இந்த மையமானது இயங்கி வந்த நிலையில், தற்போது 48 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். […]
