சொத்து தகராறில் சிறுமியை கடத்தி சென்ற இரண்டு உறவுகார பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நொளம்பூர் பகுதியில் புவனேஸ்வரி என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் புவனேஸ்வரி நொளம்பூர் காவல் நிலையத்தில் தனது 12 வயது மகளை உறவுக்காரப் பெண் ஒருவர் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புவனேஸ்வரியின் உறவினரான கவுசல்யா என்ற பெண் சிறுமியை திருவெறும்பூருக்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. […]
