செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக ஸ்விட்ச் பாக்ஸில் கை வைத்த கல்லூரி மாணவியை மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நன்செய் இடையாறு பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளமதி என்ற மகள் உள்ளார். இவர் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இளமதி செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, அதில் சார்ஜ் குறைந்ததால் சார்ஜ் போடுவதற்காக வீட்டிற்குள் சென்று ஸ்விட்ச் பாக்ஸில் கை […]
