11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கல்லூத்து கிராமத்தில் கூலி தொழிலாளியான லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பொன்னரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பவுத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உணவு இடைவேளையின் போது பொன்னரசி பள்ளி ஆய்வக கட்டிடத்தின் 2-வது மாடியில் […]
