ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காந்தி திடல் அருகில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்பு இருந்த ராட்சத மரம் காய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் ராட்சத மரம் முறிந்து பி.எஸ்.என்.எல் அலுவலக கட்டிடத்தின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இந்த சத்தத்தை கேட்டவுடன் பொதுமக்கள் விரைந்து சென்று பார்வையிட்டு பி.எஸ்.என்.எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
