சீனாவில் கொரோனா வைரசை கண்டறிய தானாக வந்து பரிசோதிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 10,000 பரிசளிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 906 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு சீன அரசு தினமும் முடிந்த அளவுக்கு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து கொண்டு தான் வருகிறது. ஆனாலும் நாளுக்குநாள் பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். […]
