வருகின்ற 25ஆம் தேதி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடி மரம் நாட்டும் விழா நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிகேசவபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆலயம் 13 மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகவும், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 416 ஆண்டுகள் ஆன நிலையில் இந்து சமய அறநிலையத் துறையும், பக்தர்கள் சங்கமும் இணைந்து இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். இதன் முதற்கட்டமாக கடந்த 2007ஆம் […]
