முனிச் நகரில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழா இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக மாகாண பிரதமர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் முனிச் நகரில் மிகப்பெரிய திருவிழாவான oktoberfest ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்த திருவிழாவில் உலகமெங்கிலும் உள்ளம் மக்கள் அதிகமாக திரண்டு வருவர். இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக ஆறு மில்லியன் மக்கள் ஒரே இடத்தில் கூடுவது பிரம்மிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த திருவிழா ரத்து செய்யப்படுவதாக மாகாண பிரதமர் மார்க்கஸ் சோடர் தெரிவித்துள்ளார். […]
