ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றால் அதில் வெல்லும் பரிசுத் தொகையான 2.84 மில்லயன் டாலரையும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்குவேன் என ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், இத்தாலியின் மார்கோ செச்சினாடோவுடன் (Marco Cecchinato) மோதினார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்சாண்டர் […]
