உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனா வைரஸ் இத்தாலி, […]
