விஷவாயு கசிந்த ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை தனியார் ஆலைக்கு முன்பு வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென ஸ்ட்ரைன் வாயுக்கசிவு ஏற்பட்டது. விஷவாயு கசிவால் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட […]
