டெல்லி கார்கி கல்லூரியின் நிகழ்ச்சியின் போது நுழைந்த சில சமூக விரோதிகள் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கார்கி கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சிக்கிடையே கல்லூரியின் இரும்பு கேட்டை தாண்டி வந்த சில சமூக விரோதிகள் அங்கிருந்த மாணவிகளின் உடலைத் தவறான முறையில் தொட்டும், கட்டிப்பிடித்தும் அநாகரீகமாக மிருகம் போல் அவர்கள் நடந்து கொண்டதாக மாணவிகள் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி இரவில் நடைபெற்ற […]
