கேங்ஸ்டர்கள் வரிசையில் மாஃபியா ராணியாக வலம் வந்த கங்குபாயாக மேக்கப்போட்டு நடிக்க தொடங்கியுள்ளார் ஆலியா பட். ஆலியா பட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி படத்தின் ஷுட்டிங்கை தொடங்கியுள்ளார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. மும்பையைக் கலக்கய தாவூத் இப்ராகிம், ஹாஜி மஸ்தான் போன்ற டான்களின் வரிசையில் பெண் மாஃபியா ராணியாக வலம் வந்தவர் கங்குபாய் கேதேவாலி. பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த இவர், பின்னாளில் மாஃபியா கும்பலின் தலைவியாக பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர். […]
