2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தான் 97 ரன்களில் ஆட்டமிழந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் தற்போது மனம் திறந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தாலும், இன்றளவும் இப்போட்டியின் ஹைலைட்ஸைப் பார்த்தால் நமக்கு கூஸ்பம்ஸ் தானாகவே வரும். இந்திய ரசிகர்களை பொறுத்தவரையில், இப்போட்டி ஆல்டைம் ஃபெவரைட்டாகாத்தான் இருக்கும். இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற மிக முக்கிய காரணமே கவுதம் கம்பிர் அடித்த 97ரன்கள்தான். […]
