அமேசான் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி செய்வதற்கு G7 நாடுகள் முன்வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவி வருகிறது. அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டிலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசுவேலா போன்ற மற்ற நாடுகளிலும் காடுகள் பரவி கிடக்கின்றன. இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு பாதிக்கப்பட்ட நாடுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனால் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ G7 நாடுகள் முன்வந்துள்ளது. […]
