உலக சுகாதார அமைப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் சீனாவில் பரவும் கொரோனா தொற்று குறித்த உண்மைகளை மறைப்பதாகவும் குற்றம்சாட்டி அதற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் என ஜி 7 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விவாதம் மேற்கொண்டனர். […]
