தமிழக முதல்வர் பழனிசாமி கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க கூடாது என்று ஜலசக்தித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார் நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிச்சாமி காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். […]
