சுமார் 8 மணிநேரம் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திய நாட்டுபுற கலைஞர்களை உலக சாதனை புத்தக பதிப்பாசிரியர் கண்காணித்தார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரமணமுதலிபுதூரில் உலக சாதனைக்காக நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை, உடுக்கையை பயன்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் 26 நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் சிவன், பார்வதி, கருப்புசாமி ஆகிய தெய்வங்களின் வேடங்களை அணிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இடைவிடாது 8 மணி நேரம் அவர்களது இசைக்கருவிகளை பயன்படுத்தி பக்தி பாடல்களை பாடி உலக சாதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை […]
