Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னது பேய் விரட்டும் திருவிழாவா…? ஒரே இடத்தில் திரண்ட கிராம மக்கள்….!!

பேய் விரட்டும் திருவிழாவை பார்ப்பதற்காக ஏராளமான கிராம மக்கள் ஒரே இடத்தில் திரண்டனர்.  சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மிராசு கொண்ட பூசாரி குடும்பத்தினர் ஒரு வாரம் விரதமிருந்து, தங்களது முன்னோர் வடிவமைத்து கொடுத்த கருப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு மேள தாளத்துடன் ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு வினோதமான பேய் விரட்டும் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வரிசையில் நின்றனர். இதனையடுத்து பூசாரி ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருவிழா தீர்த்தவாரி…. இளம்பெண்களுக்கு நேர்ந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கோவில் திருவிழாவையொட்டி குளத்தில் நீராடிய மூன்று இளம்பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதூர் கிராமத்தில் லட்சபூபதி என்ற காய்கறி வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி, வினோதினி என்ற இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற ஒரு மகள் உள்ளார். இதில் வினோதினி வடலூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பும், நந்தினி வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறப்பு பெற்ற கோவில்… கொடிமரம் நடும் விழா… நடைபெறும் மும்முரமான பணி…!!

வருகின்ற 25ஆம் தேதி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடி மரம் நாட்டும் விழா நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிகேசவபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆலயம் 13 மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகவும், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 416 ஆண்டுகள் ஆன நிலையில் இந்து சமய அறநிலையத் துறையும், பக்தர்கள் சங்கமும் இணைந்து இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். இதன் முதற்கட்டமாக கடந்த 2007ஆம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குவிந்துள்ள வாழைதார்கள்… ஏலம் விடும் விவசாயிகள்… சூடு பிடிக்கும் விற்பனை…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏலம் மையத்தில் குவிக்கப்பட்டுள்ள வாழைதார்களை வியாபாரிகள் வாங்கி சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழைத்தார் ஏலம் மையமானது திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டிக் கொண்டுவந்து இந்த ஏல மையத்தில் வைத்து ஏலம் விடுவர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டுவந்து இந்த ஏல மையத்தில் குவித்துள்ளனர். இதனையடுத்து காலை 10 மணியிலிருந்து வாழைத்தார்கள் ஏலம் துவங்கப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடைபடாத தரிசனம்… மகரஜோதி விழா ஏற்பாடு… பக்தர்கள் மகிழ்ச்சி…!!

வருகின்ற 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் மகரஜோதி விழா நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோவில்கள் போன்ற இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு தினமும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு […]

Categories
ஆன்மிகம் இந்து கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்களின் சபரிமலையில் நாளை கொடியேற்றம்

மாசித் திருவிழாவை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை கொடியேற்றம் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நாளை கொடியேற்றம் நடைபெற உள்ளது. கொடியேற்றம் ஆனது காலை ஏழரை மணி முதல் 9 மணிக்குள் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் வருகை தந்து குத்துவிளக்கு ஏற்றி வைக்க உள்ளார். நாளை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காது குத்தும் விழா… பிரியாணி கேட்டதால் தகராறு…. சமாதானம் செய்ய வந்தவர்க்கு கத்திக்குத்து

விழா வீட்டில் பிரியாணி கேட்டு தகராறு செய்தவர் சமாதானம் செய்ய வந்தவரை வெட்டினார் திருவண்ணாமலை  மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகாலட்சுமி தம்பதியினரின். இத்தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் பிரியாணி விருந்தாக போடப்பட்டது. இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த ஏழுமலை தனக்கு பிரியாணி பார்சல் செய்து தர வேண்டுமென மகாலட்சுமியின் உறவினரிடம் கேட்டு  பிரச்சினை செய்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் விழாவில் தகராறு செய்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சீமானை கோவிலிற்குள் அனுமதித்தது தவறு – அர்ஜுன் சம்பத்

சீமானிற்கு மரியாதை அளித்ததும் அவரை கோவிலுக்குள் அனுமதித்ததும் தவறு என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்ததாகவும். அதற்கான ஏற்பாடுகளை செய்த கலெக்டர் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். பின்னர் சிவலிங்கத்தையும் சிவபெருமானையும் இழிவாக பேசிய சீமானை பெரிய கோவிலினுள் அனுமதித்தது தவறான செயல் எனவும், அவருக்கு மரியாதை கொடுப்பதும் தவறு […]

Categories
ஆன்மிகம் இந்து தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரூ 9,00,000 மதிப்பு… பர்மாவில் இருந்து தஞ்சைக்கு வந்த கொடிமரம்..!!

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி  பர்மாவில் இருந்து கொடிமரம் வந்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு தற்போது தஞ்சை பெரிய கோவிலில் பழைய கொடிமரம் அகற்றப்பட்டு புதிதாக கொடிமரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கொடி மரமானது பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமாக  இருக்கும் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரியாணி திருவிழா…. திரண்ட மக்கள்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோயிலில் நடைபெற்ற மெகா பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி முனியாண்டி சாமி கோயிலில் 85வது ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதையொட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பெண்கள் தேங்காய் பழம் பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி […]

Categories
தேசிய செய்திகள்

“மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு” கலந்து கொள்வாரா கமல்..?

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில்  நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில் மோடியே  மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். […]

Categories

Tech |