திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய அம்மனின் திருவிளையாடல் நிகழ்வை நினைவுகூறும் விதமாக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம் பிரசத்தி பெற்ற ஸ்தலமாகும். முன்னொரு காலத்தில் தை அமாவாசை தினத்தன்று, அம்மனை வழிபட வந்த சோழமன்னரிடம், அம்மனின் தீவிர பக்தரான அபிராமிபட்டர், இன்று பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மன்னர், இன்று பௌர்ணமி இல்லை என்றால், மரணதண்டனை விதிக்கப்படும் என்றார். […]
