பனையின் சிறப்புகளை ஒன்று இந்த பதநீரும் ஆகும். பனையில் இருந்து கிடைக்க கூடிய ருசி மிகுந்த பானம் பதநீர். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரித்து அதை பருகினால் அப்பப்பா அதனையொரு ருசி, புத்துணர்ச்சி. உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கத்தை கொடுக்கும். சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கு சிறந்த பானம். கோடை காலங்களில் ஏற்படும் நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் உண்டாகும் வலிகள் அனைத்தையும் குணப்படுத்தும். பதநீரை, பழைய கஞ்சியுடன் […]
