கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் […]
