திருப்பத்தூர் மாவட்டத்தில் 3கோடியே 11 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு 2019 2020 ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில்ஆகியோர் கலந்துகொண்டு மிதிவண்டி […]
