அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி முன்னாள் கவுன்சிலரின் மைத்துனரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் வீரப்பனின் மைத்துனர் சாம்பசிவம் (35). தனது இல்ல திருமண நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டுக்குப் அழைப்பிதழ் கொடுக்க கிருமாம்பாக்கம் அரசுப் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி, பின் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், […]
