வீட்டுக்காவலிலுள்ள காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்குரிய சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கு முன்பாக, அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் மத்திய அரசு அடைத்தது. அதில், முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு […]
