நடிகர் அஜித்தின் உதவியாளர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாக கிடைத்த தகவலின்படி அவரது வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான நடிகர் அஜித்குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா என்பவர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாகவும் அந்த பாம்பிற்கு தினமும் நான்கு எலிகளை உணவாக அளிப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை அறிந்த வனத் துறையினர், மதுரவாயலில் உள்ள அஜித் குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். […]
