விருதுநகர் அருகே காட்டு தீ அணைப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விருதுநகர் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டுவது வழக்கம். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மான், புலி, கரடி, நரி, உள்ளிட்ட காட்டு விலங்குகள் உயிரிழப்பதும் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் தீயில் கருகி நாசமாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வண்ணம் வனத்துறையினருக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், அணைப்பதற்குமான பயிற்சி நேற்று தாணிப்பாறையில் வைத்து நடைபெற்றது. […]
