விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் உடன் மர்மநபர்கள் சுற்றித் திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராஜபாளையம் வனத்துறையினர் அதிகாலை 3 மணி அளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொய்யாப்பழம் மற்றும் பலாபழங்களின் நடுவில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்தும் வனவிலங்குகளை வேட்டையாட வந்திருந்த சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் சிவராம […]
