Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் 14 மயில்கள் உயிரிழப்பு..!!

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயத் தோட்டத்திற்குள் மர்மமான முறையில் இறந்துகிடந்த 14 மயில்களை வனத்துறையினர் மீட்டனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை கிராமம் பாரதிநகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் சோளம் போன்ற பல வகையான விவசாயப் பயிர்களை பயிர்செய்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வரும் மயில்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பால்காரர் ராமசாமி – குப்புலட்சுமி தம்பதியினருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில், ஏழு ஆண் […]

Categories
தேசிய செய்திகள்

குடியிருப்பில் புகுந்த 3 மலை பாம்புகள்… அதிரடியாக மீட்ட மீட்புக்குழுவினர்..!!

மும்பையில் அடுத்தடுத்து 3 மலைப் பாம்புகளை பிடித்த மீட்புக்குழுவினர், அவற்றை பைகளில் அடைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர். மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை பாந்த்ரா நகர் அடுத்துள்ள காலா நகர் பகுதியில், மலைப்பாம்பு ஓன்று புகுந்து விட்டதாக 12.30 மணியளவில் அழைப்பு வந்தது. இதையடுத்து உடனே அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், சாமர்த்தியமாக சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அடுத்த ஒரு மணி நேரம் கழித்து மற்றொரு இடத்திலிருந்து அழைப்பு வர, அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

12 அடி நீளமுள்ள ராஜநாகம்… பீதியடைந்த மக்கள்… லாவகமாக பிடித்த வனத்துறையினர்..!!

கர்நாடக மாநிலத்தில் 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை வனத்துறையினர் தைரியமாக பிடிக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.   பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்த பலமொழிக்கேற்ப நாமும் பாம்பு என்றால் நடுங்கத்தான் செய்வோம். ஆனால் ஒருசிலர் சர்வசாதாரணமாக பாம்பை பிடித்து கையில் வைத்து விளையாடுவர். அதேபோல வனத்துறையினருக்கும் பாம்பை கண்டு பயம் இருக்காது. காரணம் வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனே பொதுமக்கள் அவர்களை தான் முதலில் கூப்பிடுவார்கள். அவர்களும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளைநிலங்களில் “யானைகள்”அட்டகாசம் … ஓசூரில் பரபரப்பு ..!!

ஓசூர் அருகே காட்டுயானைகள் நடமாடிக் கொண்டு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தினர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்கும்படி வனத்துறையினர்  எச்சரிக்கை செய்துள்ளனர். கெலவரப்பள்ளி அணையின் நீர்தேக்க பகுதியில் இரண்டு காட்டு யானைகளின் நடமாட்டமானது காணப்படுகிறது . இந்நிலையில் திடீரென சித்தனப்பள்ளியில்  உள்ள விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.  தற்போது கெலவரப்பள்ளி அணைக்கு அருகே உள்ள நீர்நிலை பகுதியில் காட்டு […]

Categories
உலக செய்திகள்

ஆச்சரியம்..!! உணவு தேடி 700 கி. மீ நடந்து ஊருக்குள் வந்த பனிக்கரடி..!!

ரஷ்யாவில் உணவு தேடி 700 கிலோ மீட்டர் தூரம் வரை  பயணித்து ஊருக்குள் வந்த  பனிக்கரடியை  வனத்துறையினர் மீட்டனர். ரஷ்யாவில் திலிசிக்கி (Tilichiki) என்ற கிராமத்தில் பனிக்கரடி ஓன்று புகுந்துள்ளதாக அப்பகுதியினர்  காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த அதிகாரிகளுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதிர்ச்சி என்னவென்றால்  திலிசிக்கி கிராமம்  பனிக்கரடிகளின் நடமாடும் இடத்தில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையில் பனிக்கரடி ஊருக்குள் வந்தது ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியது. […]

Categories

Tech |