சுதந்திரமாக சுற்றித்திரியும் வரையாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் தொந்தரவு அளிக்கக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் வழியில் வரையாடுகள் சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கிறது. இதனையடுத்து வரையாடுகள் சாலையின் நடுவே அங்கும் இங்கும் உலா வருவதால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மலைப்பாதையில் நிற்கும் வரையாடுகளை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் வனத்துறையினர் […]
