வெளிநாட்டு வெங்காயம் இந்திய சந்தைகளுக்கு வந்துள்ளது. இதற்கான விலை கிலோ ஒன்றிற்கு ரூ.57 முதல் ரூ.60 வரை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 790 டன் மும்பை வந்துள்ளது. இந்த வெங்காயம் ஆந்திரா, டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏறக்குறைய 12,000 டன் வெங்காயம் டிசம்பர் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும். அரசாங்கத்தின் சார்பாக வெங்காயத்தை இறக்குமதி செய்யும் பொருட்டு மாநில அரசின் எம்எம்டிசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. […]
